களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
யார் கள்ளர்?

கள்ளர் குடி பெருமக்களே...

கள்ளர் என்பவர் யார் என்ற வரலாற்றினை முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

நாம் எப்படி முக்குலத்தோரில் முதல் குலம் ஆனோம் என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள்.

இவைகளை நம் சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்கவாவது இந்தக் கட்டுரையை சற்று படியுங்கள்.

தமிழுலகம் தோன்றி அரசர்களும் நாடுகளும் உருவாகிய நாள்முதலாய், போர் என்றவுடன் முந்திச் சென்று போர்க்களத்தில் முதல் பல வரிசைகளில் களப்படையினர் கையில் வேலுடனும் வாளுடனும் "வெற்றிவேல் வீரவேல்" என வெற்றி முழக்கத்துடன், எதிரி எப்படித் தாக்குவான் எனத்தெரியாத நிலையிலும் நெஞ்சில் உரத்துடன் களம் காண்பார்களே களப்படையினர்... அவர்கள்தான் கள்ளர்கள்!

அவர்களுக்குப் பின்னால் "பந்திக்கு முந்து போருக்கு பிந்து" எனும் பழமொழிக்கேற்ப களப்படையினரை எதிரிகள் எந்த யுத்தியில் தாக்குகிறார்கள் என்பதைக் கணித்து, அரண்மனையில் முறைப்படி போர்ப்பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களாய் குதிரைப்படை யானைப்படை என பல்வேறு பயிற்சிகளைப் பெற்ற மறப்படையினர் களம் காண்பார்களே...அவர்கள்தான் மறப்படையினர் எனும் மறவர்கள்!

அவர்களைக் கடந்து எதிரிகள் கோட்டை அருகே வந்துவிட்டால் அகப்படையினர் வில் கொண்டும் வேல்கம்பு கொண்டும் அம்பு எய்தியும் எதிரிகளைத் தாக்குவார்கள். அவர்கள்தான் அகப்படையினர் எனும் அகமுடையார்கள்.

இறுதியில் அரண்மனையில் ஆலோசகர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த பிள்ளைமார்களின் வாரிசுகள், அமைச்சர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் பாதுகாக்க எண்ணி வெள்ளாளர்குல வீரர்கள் களம் காண்பார்கள். இதனால்தால் காலத்தால் அழியாத "கள்ளர், மறவர், கனத்ததோர் அகமுடையார் மெல்லமெல்ல வந்த வெள்ளாளர்" எனும் பழமொழி இன்றளவும் மறையாமல் உள்ளது.

முக்குலம் என்பதும் முக்குலத்தோர் என்பதும் ஏதோ உடன்பிறந்ததைப் போன்ற புராணகதைகளால் ஏற்பட்டது அல்ல. இந்த மூன்று குலத்தாரும் போர்க்குடிகள் ஆதலால் களப்படையினர் எனும் கள்ளர், மறப்படையினர் எனும் மறவர் அகப்படையினர் எனும் அகமுடையர் என மூன்று போர்க்குடிகளும் முக்குலமாய் போற்றப்பட்டனர்.

இதில் களப்படையினர் எனும் கள்ளர் முந்தைய காலங்களில் களர் என அழைக்கப்பட்டனர். அதனை மறுவச் செய்து பிந்தைய ஆட்சியாளர்கள் நமக்கு கள்ளர் எனப் பெயர் மாற்றம் செய்ததோடு அர்த்தத்தினையும் தவறாகப் புகுத்தினர்.

போர் என்றதும் அரசவையில் இருந்து தன்னரசு கள்ளர் நாடுகளுக்கு ஓலை வந்ததும் விவசாயக் குடிகளாய் இருக்கும் கள்ளர் கூட்டம் வீட்டில் இருக்கும் வாளுடனும் வேலுடனும் கிளம்பிச் சென்று போர்க்களத்தில் முதல் வரிசையில் நெஞ்சினை நிமிர்த்தி நின்று நாட்டையும் நாட்டு மக்களையும் காத்ததோடு நாட்டுக்காய் உயிர்விட்ட கூட்டம் இக்கள்ளர் கூட்டம்!

வெள்ளையர்களை எதிர்த்து கள்ளர் தடி எனப்படும் வளரி கொண்டு தாக்கி வெள்ளையர்களை ஓடவைத்த கூட்டம் இந்தக் களப்படையினர் கூட்டம்!

நம் வீரம் கண்டு பயந்த வெள்ளையர், நமக்காக குற்றப்பரம்பரை என்ற சட்டமும் தினசரி கையெழுத்திடவேண்டும் என்ற சட்டமும் கொண்டுவந்த போதிலும் அடங்கமறுத்த ஒரு கூட்டம் இந்த களப்படையினர் கூட்டம்!

நேதாஜியின் படையில் பெருமளவில் சேர்ந்து சுதந்திரத்திற்காய் போரிட்ட கூட்டம் இந்த களப்படையினர் எனும் கள்ளர் கூட்டம்!

நம் வீரம் கண்டு நம்மை எதிரிகள் நாட்டுக்கு ஒற்றர்களாய் அனுப்பியதுண்டு... நள்ளிரவில் எதிரிகளின் கூட்டத்திற்குள் சென்று போர்க்கலன்களை நாசமாக்கி வெற்றியை வசப்படுத்தியதுண்டு... ஆனால் ஒருபோதும் நாம் திருடர்களாய் இருந்தது இல்லை!

இன்று வெள்ளையர்களின் வரிசையில் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில அரசியல்கட்சிகள் நம்மை கள்ளர்களாக, கள்ளர் எனில் தவறானவர்களாக சித்தரித்து, நம் போர்க்குடிகளின் வீரத்தினை அவர்களுக்கு அடியாள்கூட்டமாக மாற்றியிருக்கிறது.

ஒரு நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாக்கும் பணியினைச் செய்பவன் ஒருபோதும் எந்தவொரு சாதிக்கும் எதிரானவனாக இருந்திருக்க மாட்டான். பல்வேறு சாதியினரையும் அரவணைப்பவனாகவே இருந்திருப்பான்.

நம் தமிழ்க்குடிகளுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நம்மை சண்டையிட்டுக்கொள்ள வித்திட்டது இந்த அரசியல் கூட்டம்!

எனவே நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லி வளர்ப்போம்... நாம் போர்க்குடி என்று! இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணி நம்முடையது என்று! நமக்கென்று பல உயர்ந்த பண்பாடுகள் உள்ளன. அதனைப் பாதுகாத்து உலகறியச் செய்வோம்.

கல்விபெற்ற சமுதாயமாக...
தொழில்சார்ந்த சமுதாயமாக...
அரசுப்பணி சார்ந்த சமுதாயமாக
ஒற்றுமைமிக்க ஒரு சமுதாயமாக மாறுவோம்.

இவண், ஒருங்கிணைப்பு குழு
களப்படையினர் போர்க்குடி சமூகம்
[ கள்ளர் சமூகம் ]