களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
ஈச நாட்டுக் கள்ளர்கள்

கள்ளர் மரபினரின் வரலாறு

உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் /கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர்:கரியவன், வெட்சியர், பண்டையர், அரசர். நிலைப்படை நிலப்பகுதி கள்ளர் படைப்பற்று, குடியிருக்கும் தொகுதி கள்ளர்நாடு என்று பெயர்பெறும்.

ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர்.

இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர்.

கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக முல்லை நிலமான மன்னார்குடியின் இராஜகோபாலசுவாமி கோயிலின் இராஜாதிராஜ சோழங்கதேவரின் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கள்ளப்பற்றும், நாயக்க, மராட்டிய கல்வெட்டில் காணப்படும் கள்ளப்பத்தும் மற்றும் தஞ்சையில் உள்ள பழமையான கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஏற்ப கள்ளர் பட்டங்களும் மற்றும் தஞ்சையில் உள்ள 12 பாளையக்காரர்களும் கள்ளர்களே ஆவார்கள். இதை தவிர ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களுடைய பூண்டி வாண்டையார்கள், உக்கடை தேவர்கள், அய்யம்பேட்டை சாவடி நாயக்கர், அரித்துவாரமங்கலம் ராசாளியார்கள் கள்ளர்களே.

சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக் கொள்கின்றனர் - என்று கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில் குறிப்பிடுகிறார்.

இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் வேங்கடத்திலிருந்து இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர்.

அறந்தாங்கி தொண்டைமானாரின் முன்னோர் வாள்விட்ட பெருமாள் தொண்டைமானார் தன்னை விசங்க நாட்டு தொண்டைமானாக குறித்துள்ளார்.

ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் -

 • ✓ தேவர்
 • ✓ விஜயதேவர்
 • ✓ சிவலிங்கதேவர்
 • ✓ தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்),
 • ✓ சிங்கம்புலியார்
 • ✓ சோழங்கதேவர்,
 • ✓ கோபாலர்,
 • ✓ கடாரம்கொண்டார்
 • ✓ ஈழங்கொண்டர்
 • ✓ கொல்லத்தரையர்
 • ✓ இராசாளியார்,
 • ✓ பல்லவராயர்,
 • ✓ மழவராயர்,
 • ✓ நாட்டார்,
 • ✓ வன்னியர்,
 • ✓ அம்பலகாரர்,
 • ✓ வாண்டையார்,
 • ✓ சேர்வைகாரன்,
 • ✓ சோழகன்,
 • ✓ பழுவேட்டரையர்,
 • ✓ கொங்கரையர்,
 • ✓ முத்தரையர்,
 • ✓ ஒண்டிப்புலியார், , கொடும்பாளுர்ராயர்,
 • ✓ சேனைகொண்டார்,
 • ✓ சேதுராயர்,
 • ✓ சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர்,
 • ✓ தென்னவன்,
 • ✓ நரசிங்கதேவர்,
 • ✓ நாடாவி

என்று ஈராயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பட்டங்களை பெற்றுள்ளனர்.

உதாரணமாக ஒரு ஈசநாட்டு கள்ளர்கள் நிகழ்ச்சி பத்திரிகை

சம்பட்டியார் என்பது ஒரு சாராருக்கு பட்டமென்றால், அவர்கள அதே சம்பட்டியார் வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டார்கள். ஒரே பட்டம் உள்ளவர்கள் பங்காளிகள்.

குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன்), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

பெயர் விளக்கம்:

விசங்கு / ஈசங்க / ஈசநாட்டு கள்ளர் என்றும், தஞ்சை கள்ளர்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இந்த பெயருக்கான சரியான விளக்கங்கள் , ஆதாரங்கள் தெளிவாக இல்லை.

கொடி விளங்கும் தேரினையுடையவன் பாண்டிய மன்னன் ஆவான். அவனுடைய மலையென்று உரிமையுடன் போற்றப்பெறுவது பொதியமலை ஆகும். அகத்தியனார் இருந்து தமிழ்வளர்த்த பெருமை உடையது அது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர். சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய், திதியன், ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர்.

இங்கு மலையில் தோன்றிய குறிஞ்சி நாகரிகமே குமரி நாகரிகம். இந்த பகுதியில் வாழ்ந்த கள்ளர்கள், அங்கு மட்டுமே வாழ்ந்த அன்னத்தின் பெயரால் விகங்கம் / விசங்கம் மலை கள்ளர் என்றும் மருவி பின் விசங்குநாடு, ஈசங்கநாடு, ஈசநாடு கள்ளர் என்று ஆனது என்ற கருத்தும், சோழமண்டலத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்ற கள்ளர்களின் பட்டங்களான பொதியர், அகத்தியர் என்பது அகத்தியரின் பொதியமலையின், பழைய எச்சங்களின் மிச்சமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இவையெல்லாம் ஒரு செவி வழிச் செய்தியாகவே உள்ளன.

அரித்துவாரமங்கலம் தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. V. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து நீக்கும் படி கேட்டுக்கொண்டார். இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் Denotified Kallar Tribe என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (Esanattu Kallars) அழைக்கப்பட்டனர் என்கிறார்கள் ஆனால் S. Winfred - 1874 ல் எழுதிய சாண்றோர்குல மரபுகாத்தல் நூலில்

"ஈந்து விருகூடித்துக்கு ஈச்ச விருகூடிம் என நூல்க ளில்ப் பெயர் ... ஈந்து மரத்தில் இருந்து மதுவிறக்கி குடிப்பதால் ஈந்த நாட்டு கள்ளர் மருவி ஈசநாட்டு கள்ளர் ஆனதாக 1874 ஈசநாட்டு கள்ளரை குறிப்பிடுகிறார்.

கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து, தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல், கி.பி. 1917 ஆம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது அதில் ஈசநாட்டுக்கள்ளர் பற்றி :

பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டும் என்கிறார்.

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை

மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. அரையன் < அரசன் என வருவது போலவும், அரசன் > ராசன் என வருவது போலவும் மா-அரையன் என்னும் சொல் மாராயன் என மருவும்.

"பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். அரசன் பெறும் விருது. மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான். சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.

பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.

 • ✓ எட்டி – சிறந்த வணிகர்
 • ✓ காவிதி – சிறந்த உழவர்
 • ✓ கிழார் – ஊர்த்தலைவர், புலவர்
 • ✓ கிழான் – ஊர்த்தலைவன், சிற்றரசன்
 • ✓ தலைக்கோல் - சிறந்த அவைக்கூத்து நாட்டியக்காரி
 • ✓ தாமரை (விருது) – சிறந்த தெருக்கூத்து விறலி
 • ✓ மாசாத்துவன் – தரைவணிகரின் தலைவன்
 • ✓ மாநாய்கன் – கடல்வணிகரின் தலைவன் சிலப்பதிகாரக் கண்ணகியின் தந்தை
 • ✓ மாராயம் – சிறந்த படைவீரன்

சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச்சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர். செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாகும்.

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.

1) பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.

2) பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.

3) பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.

4) பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.

இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.

இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:- அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.

கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.

கள்ளர் குல பட்டங்கள் ஏதோ 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு வந்தது போலவும் , கள்ளர்கள் பிறரிடம் இருந்து பட்டங்களை திருடி விட்டார்கள் என்றும் பலர் புலம்புவதை காணமுடிகிறது. இவர்கள் இதற்கு ஆதாரமாக 1950 ஆம் ஆண்டுவாக்கில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) எழுதிய, விஜய நகர வரலாறு என்ற நூலில் 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு பட்டங்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர் எந்த ஆதாரமும் கொடுத்துள்ளாரா என்றால் அதில் எதுவும் இல்லை.

பல சாதியினருக்கும் பல பட்டங்கள் உள்ளன, அதில் ஒரே பட்டம் பல சாதியினர்க்கும் உள்ளது. ஆனால் கள்ளர்களுக்கு உள்ளது போல சங்க இலக்கியங்களிலும் , தொன்மையான தமிழ் வார்த்தைகளிலும் உள்ள பட்டங்கள் யாருக்கும் உண்டா என்றால் கண்டிப்பாக இல்லை.

உதாரணமாக, இங்கே கீழே உள்ள இந்த பட்டங்கள் வேறு சாதியினருக்கு உண்டா என்றால் கண்டிப்பாக யாருக்கும் கிடையாது.

 • ✓ அம்பர்த்தேவன்
 • ✓ அம்பராண்டான்
 • ✓ அருவாநாட்டான்
 • ✓ உறந்தைராயன்
 • ✓ காவிரிநாடன்
 • ✓ மண்வெட்டிக்கூழ்வாங்கி
 • ✓ புத்திகழிந்தான்
 • ✓ முனையதரையன்
 • ✓ஆர்சுத்தியார்
 • ✓ சிவலிங்கதேவர்

இதைப்போல பழமையான தமிழ் சொல்லில் உள்ள பட்டங்கள் இன்னும் பல உண்டு.

கள்ளர்களில் உள்ள ஒவ்வொரு பட்டங்களிலும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஒரே ஊரிலும் அல்லது அதே பட்டங்களில் 100 கிமீ அப்பாலும் உள்ளனர். கள்ளர் பட்டங்களின் பெயர்களால் பல ஊர்களே இன்று சிறந்து விளங்குகின்றன.

இவர்கள் சொல்வது போல கள்ளர்கள் 15 ஆம் நூற்றாண்டளவில் தான், இத்தனை பட்டங்களை அதாவது பழமையான தமிழ் சொல்லில் உள்ள பெயர்களை கூட, தங்கள் பட்டங்களாக தமக்கு சூட்டி கொண்டார்கள் என்றால் அது நகைப்புக்குரியது. அது அவர்களின் அறியாமை அல்லது பொறாமை.

தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம், கள்ளர் இனத்தை மட்டுமே குறிக்கும் என்கிறது. அவை

✓ வாண்டையார்
✓ இராசாளியர்
✓ அண்ணூத்திப்பிரியர்
✓ அங்கராயர்

கீழே உள்ள பட்டம் கள்ளர்களுக்கும் பல சாதிகளுக்கு உள்ளதாக காட்டுகின்றது.

1) வன்னியன்
2) சோழகன்
3) தேவர்
4) பல்லவராயர்
5) தொண்டைமான்
6) மழவராயன்
7) காங்கேயன்
8) முத்தரையன்
9) கொங்கராயர்

மேலும்

கிபி 1226!! காஞ்சீபுரம்!! சுந்தரபாண்டியன் கால கல்வெட்டில் உள்ள நமது கள்ளர் இன பட்டங்கள் , நேரடியாகவே கல்லன் என்றே குறிக்கின்றது.

1) கிளிமங்களமுடையன் கல்லன்
2) கடம்பராயன் கல்லன்
3) காங்கேயன் கல்லன்
4) மாகதராயன் கல்லன்

கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான்' என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி ) கூறுகிற

“ இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818, திருமெய்யம் )

மேலும் கள்ளர்களுக்கு "நாயக்கர்" என்ற பட்டமும் இருக்கிறது என்பதை, இடங்கை வலங்கை வரலாறு என்ற நூலில், பக்கம் - 86 இல் குறிப்பிடப்பட்டுள்ளது

"அய்யம்பேட்டை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், பெருமாக்கூர் அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், மேல்மாந்தை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும்".

நாவாய் மூலம் வணிகம் செய்யும் கடல் வணிகருக்கு நாவிகன், நாயகன் போன்ற பெயர்களும். சாத்துகள் மூலம் தரைவழி வணிகம் செய்யும் வணிகருக்கு சாத்தன் அல்லது சாத்துவன் என்ற பெயர்.

வன்னியன், உடையான், முதலியான், முத்தரையன் என்ற பட்டங்களை தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள். பள்ளி மற்றும் படையாச்சி என்பவர்கள் வன்னியன் என்றும், வலையர், முத்துராஜா போன்ற 29 பிரிவுகள் முத்தரையன் என்றும் , இந்த நூற்றாண்டில் தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள் . முக்குலோத்தோரை தேவர் என்ற ஒற்றை சாதியாக தமிழக அரசு மற்றம் செய்ய தஞ்சை கள்ளர்கள் மற்றும் சிவகங்கை அகமுடையார் எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றவில்லை.

கள்ளர்களின் மேலே உள்ள பட்டங்கள் பழமையானது என்பதற்கு சில தரவுகள் :

அம்பர்த்தேவன்:

அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் பெயர் ஆகும். அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், குறிக்கப்படுகின்றது. அம்பர் பெருந்திருக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில்

பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை. புறநானூறு - 385. காவிரி அணையும் படப்பை!

"காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன். நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே"

பொருள் : காவிரி பாய்ந்துநெல் விளையும் அம்பர் அருவந்தை அவன் பெயர். புலவர் அவனை வாழ்த்தினார். அவன் நீண்டநாள் வாழவேண்டும். புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட அதிக நாள் வாழவேண்டும்.

அருவாநாட்டான் :

காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். காலம் 2000 ஆண்டுகள் முந்திய பெயர்.

உறந்தைராயன் :

உறையூர் (சோழ ருறந்தை யவையத்து (புறநா. 39).) உறையூரின் பழமையான பெயர். உறந்தைராயன் குடிக்காடு : இவ்வூரில் மக்கள் தொகையி ல் இந்த பட்டம் கள்ளர் பிரிவினரே பெரும்பான்மையினர்.

காவிரிநாடன் :

கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.

மண்வெட்டிக்கூழ்வாங்கி :

தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டியில் கூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் : பொன் (திவா.) )

பசும்படியார் :

பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும்வழங்கலாயிற்று. பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறு என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் அமைந்துள்ள இடம் கள்ளர் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகிறது.

பாப்புரெட்டி & பாப்பரையன் ;

இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்.

புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்.

பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் ( அறிவு மிகுந்தசோழன்) . புத்திகழிச்ச : அறிவு மிகுந்த

முனையதரையன், முனையதிரியர் :

சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

“புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும் அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின் முனையதரையன் பொங்கல் “

திருக்கண்ணபுரம், இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு

ஆர்சுத்தியார் :

சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’. இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ

“நெடுந்தண் “ஆர”த்து அலங்கு சினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம் தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும். நற்றிணை 292-௨

ஆர் மரத்தில் தொடுத்திருந்த தேனை எடுப்பதற்காக ஆர் மரத்தை வளைத்தனர். அப்போது ஆர் மரத்தைப் பற்றியிருந்த தமாலக்கொடி நழுமுத்தரையன்விட்டது.

நரசிங்கதேவர், நரங்கியதேவர் :

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் கல்வெட்டு:

அரசு: வாணாதிராயர், ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு

செய்தி : செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........

மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......

தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம் :

அம்பலகாரன் : கிராமத் தலைவன் கள்ளர் , வலையர் பட்டப் பெயர்.

கொங்கராயர் : கொங்கராயபாளையத்திலுள்ள உடையார் சாதியைச் சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப் பெயர், கள்ளர் சாதிவகையினரின் பட்டப்பெயர்.

செம்புலி : பழுப்புநிறமுள்ள புலிவகை, கள்ளர் சாதியில் ஓர் உட்பிரிவு

சேதிராயர் : தமிழகத்தின் நடுநாட்டரசர், திருவிசைப்பாவாசிரியருள் ஒருவரான சிவனடியார், கள்ளர் பட்டங்களிலொன்று

சேர்வை : அகம்படியர்க்கும், மறவர் கள்ளர் வன்னிய சாதி உள்வகுப்பினர்க்கும் வழங்கும் பட்டப்பெயர்.

சோழகன் : கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான், கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று.

தொண்டைமான் : புதுக்கோட்டையரசர் பட்டப்பெயர், கள்ளர் மறவர் முதலிய சிலசாதியாரின் பட்டப்பெயர்.

நாட்டார் : நகைசெய்ய (திருவாச), நாட்டு மகாசனம், நாட்டாண்மைக்காரர், கள்ளர் செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.

பல்லவராயன் : சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று, கள்ளர், ஓச்சர் முதலிய சிலசாதிகளின் பட்டப் பெயர்.

ராயர் : இராயர், கள்ளர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.

வன்னியன் : ஒரு சாதி, கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப் பெயர்.

அங்கராயர் : பெருங்குறிஞ்சா. (சித். அக.), கள்ளர் பட்டங்களு ளொன்று.

அச்சுதப்பண்டாரம் : நெம்புதடி , கள்ளர் பட்டங்களுளொன்று.

மழவராயன் : கள்ளர்முதலிய ஒரு சார் சாதியினரின் பட்டப் பெயர்.

முதலியான் :

சோழர் ஆட்சியில் தலைவர்களையும், உயரதிகாரிகளியும் முதலி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலி என்ற சொல்லுக்கு முதன்மையானவர் என்று பொருளாகும். இவர்களுள் சேனைமுதலி, படைமுதலி, அகம்படிமுதலி என் மூவகை முதலிகள் உண்டு. தேவார ஆசிரியர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பதுமுண்டு. முதலியான் காலப்போக்கில் திரிந்து முதலியார் என்று வழங்கலாயிற்று. இப்பட்டம் சோழர் படையுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படுகிறது. இப்பட்டமுடைய கள்ளர் இனத்தவர் தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் முதலியார் பட்டமுடையோர் முத்ன்மையானவர்களாகவுமதிகமாகவும் வாழுகின்றனர்.